நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த வாரம் ஒரு அதிசயத்தை உங்கள் கண் முன் கொண்டு வந்துள்ளோம். கரேடி மா அம்மன் சிலையில் இருந்து திடீரென்று தண்ணீர் வரத் துவங்கியதே அந்த அதிசயத்திற்குக் காரணம்!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கரேடி கிராமத்தில் அதிசயத்தை நிகழ்த்தும் இந்த தெய்வம் சிலை வடிவில் உள்ளது.
வாசனையுடன் அம்மனின் சிலையில் இருந்து வெளியேறும் அந்த நீர் புனிதமானது என்றும், எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்றதும் கோயிலிற்கு அருகில் ஒரு குளம் இருப்பதைக் கண்டோம். அங்கு கல்லால் ஆன ஒரு சிலை இருந்தது. அந்தச் சிலையில் தோளில் ஒரு ஓட்டை இருந்தது. அந்த ஓட்டையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் வந்ததாக கோயில் பூசாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலில் தாங்கள் அந்தத் தண்ணீரை முற்றுமாக எடுத்துவிட்ட பின்னரும் மீண்டும் அதில் நீர் நிரம்பியதாகக் கூறினார்.
அந்தக் கிராமத்தின் தலையாரியான இந்தர் சிங்கை சந்தித்தோம். அவர், இந்தச் சிலை மிகப் பழமையானது என்று கூறனார். எந்த அளவிற்கு பழமைவாய்ந்தது என்றால், அது மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறினார்.
|