முதன்மை பக்கம்  ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
 
நெய் ஆறாக ஓடும் ரூபால் கிராமம்!
Webdunia
webdunia photoWD
நெய் ஆறு ஓடுவதை நீங்கள் எங்காவது கண்டதுண்டா? நிச்சயம் இல்லை என்றே கூறுவீர்கள். ஸ்ரீராமன் ஆண்ட காலத்தில் பாலும், நெய்யும் ஆறாக ஓடியதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், நெய் ஆறு ஓடுவதை குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டோம்.

நம்பினால் நம்புங்கள் என்ற தொடரில் இந்த வாரம் தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு 6 லட்சம் கிலோ நெய்யை நிவேதனமாக அளிக்கும் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.

குஜராத் மாநிலம் ரூபால் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் வணங்கும் தெய்வமான அத்திய சக்தி வர்த்தாயினி மாதாவிற்கு நவராத்திரி பண்டிகையின் 9வது நாளன்று ஒரு பெரும் ஊர்வலத்தை நடத்தி தெருவிற்குத் தெரு லட்சக்கணக்கான கிலோ நெய்யை நிவேதனம் செய்து வழிபடுகின்றனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். வர்த்தாயினி மாதாவிற்கு நெய் நிவேதனம் செய்தால், தாங்கள் எதிர்பார்ப்பதை அச்சக்தி நிறைவேற்றும் என்று நம்புகின்றனர். இந்த நிவேதன விழாவின் போது சட்டையிலும், பெண்களின் ஆடைகளிலும் சிந்தும் நெய் சாதாரணமாக துவைத்தாலே போய்விடுகிறது. ஆனால், நமது அன்றாட வாழ்வில் நெய் கறை ஏற்பட்டால் அதனை அகற்றுவது மிகக் கடினமாகும். இப்படியெல்லாம் கூறப்பட்டதைக் கேட்ட நாங்கள், இவை உண்மைதானா என்பதை அறிய அக்கிராமத்திற்குச் சென்றோம்.

பல்லி மகோத்சவம் என்ற அந்த 9வது நாள் நவராத்திரி விழாவை காணச் சென்றோம். ஊர்வலம் புறப்படத் தயாராக இருந்தது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். பொதுவாக நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட வேண்டிய அத்திய சக்தி வர்த்தாயினி மாதா வீதி உலா, கீச்ரா எனும் பாரம்பரிய உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் அதிகாலை 3.30 மணிக்குத்தான் துவங்கியது.

webdunia photoWD
அந்த கிராமத்தில் உள்ள 27 தெருக்களிலும் பெரிய வண்டிகளில் நெய்கள் நிரப்பட்ட டின்கள் வைக்கப்பட்டிருந்தன. வர்த்தாயினி மாதாவின் பல்லக்கு ஒவ்வொரு தெரு முனைக்கும் வரும்போது வாளிகளில் நெய்யை ஊற்றி அம்மனுக்கு நிவேதனம் செய்தனர்.

கடந்த ஆண்டு 4.5 லட்சம் கிலோ நெய் நிவேதனம் செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு 6 லட்சம் கிலோ நெய் நிவேதனம் அளிக்கப்பட்டதாகவும் வர்த்தாயினி தேவஸ்தானத்தின் அறங்காவலர் நித்தின்பாய் பட்டேல் எங்களிடம் தெரிவித்தார்.

இந்த நெய்யை எடுத்து குழந்தைகளின் உடலில் பூசினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், அவர்களை எந்த தீய சக்தியும் தீண்டாது என்றும் நம்புகின்றனர். புதிதாக திருமணமான பெண்களும், தங்களது கணவன்மார்களுடன் வந்து வர்த்தாயினி மாதாவை தரிசிக்கின்றனர். வர்த்தாயினி வீதி உலா வரும் போது நெய் நிவேதனம் செய்தால் பிள்ளையில்லாதோருக்கு பிள்ளை பிறக்கும் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
ரூபால் வர்த்தாயினி மாதா!
வெப்துனியா விவாதம்
நம்பிக்கை எது? மூட நம்பிக்கை எது?
மேலும்
நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில் நமது வாழ்வும் விதியும்!
நிறம் மாறிய சிவலிங்கம்!
சாச்சாவா : பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!
நாய்க்கடிக்கு சாக்கடை நீர் சிகிச்சை
மனித உயிர்களைக் குடித்த குருட்டு நம்பிக்கை!