ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » வா‌ஸ்து » அக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?
வா‌ஸ்து
Feedback Print Bookmark and Share
 
வாசகர் கேள்வி: எங்களுக்கு சொந்தமான இடத்தில் அக்னி மூலையில் கிணறு உள்ளது. எனவே, அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லதல்ல என சிலர் கூறுகிறார்கள். இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன?

பதில்: வீட்டுமனைப் பகுதியில் அக்னி மூலையில் கிணறு இருப்பதால் அதனை முறைப்படி மணல் கொண்டு மூடிவிட்டு, அதற்குப் பின்னர் வீடு கட்டுவது பலனைத் தரும்.

கிணறு இருந்த பகுதியில் மீண்டும் நீர் நிலைகளை அமைக்காமல் இருப்பது நல்லது. உதாரணமாக அக்னி மூலையில் குளியலறை, ஆழ்துழாய் கிணறு அமைப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

இயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம்.

பொதுவாக தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் நீர் நிலை ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தென்கிழக்குப் பகுதியில் நீர் நிலைகள் இருந்தால் துர்மரணம், தெற்குப் பகுதியில் இருந்தால் வறுமை, தென்மேற்கு பகுதியில் நீர் நிலைகள் இருந்தால் அரச தண்டனை உள்ளிட்டவை நிகழும்.

எனவே, அக்னி மூலையில் உள்ள கிணற்றை மணல் கொண்டு மூடி விட்டு, அதன் பின்னர் வாஸ்து பிரகாரம் வீடு கட்டத் துவங்குவது நல்லது. இதன் காரணமாக பிரச்சனைகள் அகலும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: அக்னி மூலை கிணறு வீட்டுமனை தென்கிழக்கு