திருக்கணிதம், வாக்கியம் ஆகிய பஞ்சாங்கங்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்து நல்ல நேரம், பவுர்ணமி, அமாவாசை, திதி உள்ளிட்ட பல விடயங்களை எளிதாகக் கணிக்க முடிகிறது.
FILE
தற்போது எழுதப்படும் ஜாதகங்கள் மென்பொருட்கள் உதவியுடன் வடிவமைக்கப்படுகின்றன. மென்பொருட்கள் தரமானதாக இருக்கும்பட்சத்தில் இவை மிகத் துல்லியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அறிவியல் முன்னேற்றதால் நமக்குக் கிடைத்த பலன்.
எனவே, பஞ்சாங்கங்களைப் பயன்படுத்தி கணிக்கப்படும் ஜாதகங்களை விட, மென்பொருட்களின் உதவியுடன் கணிக்கப்படும் ஜாதகங்கள் துல்லியமானவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இதனை ஆரோக்கியமாக மாற்றமாகவே கருத வேண்டும்.
ஆனால் மென்பொருட்களின் தரத்தை அறிவது எப்படி? அது நம்மால் முடியாது. எனவே மரபு வழி பஞ்சாங்கத்தை பயன்படுத்தி ஜாதகத்தை கணிப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகவும், துல்லியமானதாகவும் இருக்கும்.