முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சாமுத்ரிகா லட்சணம் என்றால்...
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம், மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும், பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும், பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே... அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி, இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.

வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.

உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை, அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

ear
webdunia photoWD
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

அடுத்ததாக முடியை எடுத்துக் கொண்டால், “கோர முடி குடியைக் கெடுக்கும், சுருட்டை சோறு போடும” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும், சுற்றுத்தார், நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும், குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான, மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய், தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

சேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்பாய் என்று ஒரு சித்தர் பாடல் உண்டு.

சித்தர்கள் எப்போதும் சங்கேத பாஷையில் பேசக்கூடியவர்கள். எனவே சேலை கட்டிய என்பது சேலையைக் குறிப்பது அல்ல. சேலை என்பது மீனைக் குறிக்கும் சொல். மீனைப் போன்ற கண்கள் கொண்ட பெண்களை (அதாவது பரந்து விரிந்த) நம்பினால் என்பதுதான் அந்த பாடலின் பொருள்.

மேலும், உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

சாமுத்ரிகா லட்சணத்தை வைத்து வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாமா?

ஒருவரது ஜாதகத்தை அது அவருடையதுதானா என்பதை தோற்றத்தை வைத்துப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
<< 1 | 2 | 3 
மேலும்
மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்!
திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?
வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது ஏன்?
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?
நாக தோஷம் என்றால்...
ஜென்ம குரு என்றால் என்ன?