காலின் கட்டை விரல் வளைந்தும், மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
கண் புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சணம் பெருமையாக சொல்கிறது. சிலருக்கு கட்டையாக இருக்கும். அதை விட மெல்லிய புருவ அமைப்பு நல்லது என்று சொல்கிறது.
மேலும், பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம், அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.
கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்களிடம் கலை உணர்வு இருக்கும்.
மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி, அரசாளும் யோகம், அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு, அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும், சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.
மூக்கின் அடிப்பகுதி, நடுப்பகுதி, நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.
கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும், நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும், நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.
வாசிம் யோகம்... வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம், வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
கண்களை எடுத்துக் கொண்டால், உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான், அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல...
மான் விழி என்று சொல்வார்கள், மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும், எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் ..
|