முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சாமுத்ரிகா லட்சணம் என்றால்...
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
சாமுத்ரிகா லட்சணம் என்பது மிக சிறப்பான ஒன்று. அதாவது அங்க அடையாளங்கள் என்று சொல்லலாம். அங்கங்களின் அமைப்பு.

eye
webdunia photoWD
இதில் பிரதானமாக அமைவது மூக்கும், கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உருண்டையான கண்கள், உள் வாங்கிய கண்கள், அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மையாக இருந்தால் எப்படி, தட்டையாக இருந்தால் எப்படி என்று பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவாளிகளாகவும், சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

hand
webdunia photoWD
கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர், நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல்வார்கள். நீண்ட விரல்கள், நீண்ட கைகளும் ராஜ யோகம், நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.

காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடுத்து, உருண்டு காணப்படுவதை விட மெல்லிய விரலாக இருப்பது நல்லது.

இரண்டாம் விரலை விட சற்று தடிமனாக கட்டை விரல் இருந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.

கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பியிருக்கும், அதாவது வலது காலின் கட்டை விரல் வலது பக்கமாகவும், இடது காலின் கட்டை விரல் நுனி இடது பக்கமாகவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது, எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதை அனுபவ ரீதியாகவும் பார்த்துள்ளோம்.

கட்டை விரல் வளைந்து காணப்பட்டால் நன்மை என்று சொல்லியிருக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு ஒரு..
1 | 2 | 3  >>  
மேலும்
மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்!
திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?
வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது ஏன்?
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?
நாக தோஷம் என்றால்...
ஜென்ம குரு என்றால் என்ன?