முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்!
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?

ஆம், மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.

முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம்.

சிலருக்கு கருப்பையும், பச்சையையும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.

என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர்கள் இல்லையே, எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும், கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல்வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.

பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு, கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக - அகோரமாக காட்சி அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.

பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.

வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு, கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.

மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.

நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இதுபோன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்.


<< 1 | 2 | 3 
மேலும்
திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?
வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது ஏன்?
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?
நாக தோஷம் என்றால்...
ஜென்ம குரு என்றால் என்ன?
கோயில் குளங்களுக்கு உள்ள முக்கியத்துவம் என்ன?