கரும்புள்ளிகள் அவ்வப்போது ஏற்படுமா?
ஆம். சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் ஏற்படுவதில்லை. புள்ளிகள் இயற்கையின் விதிமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கூறுவதாகும்.
இங்கு வந்தால் இது நடக்கும், இங்கு மச்சம் வந்தால் இந்த யோகம் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சிலருக்கு ஒரு சில காலக்கட்டத்தில் மச்சம் தோன்றும். சனி, ராகு சேர்ந்திருந்து, சனி திசையில் ராகு புத்தி வந்தால் கரும் புள்ளிகள் தோன்றும்.
அதை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிலதை கூட்டி, சிலதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலின் பிறப்பகுதியைக் காட்டிலும் உள்ளங்கையில் ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் பொரும்பாலும் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பு புள்ளிகள் முதலில் கருப்பாகத் தோன்றாது. பழுப்பு நிறுத்தில்தான் தோன்றும். அப்போது அது நல்ல பலன்களைத் தரும்.
அதேப்போல உள்ளங்கையில் இருக்கும் வெண் புள்ளிகள் அதிக பணப் புழக்கம், அறிவுக் கூர்மை, எதையும் திட்டமிட்டுச் செய்யும் திறனைத் தெளிவுப்படுத்தும்.
பழுப்பு, வெண் புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நல்லது. ஆரஞ்சு புள்ளிகளால் திடீர் சொத்து வாங்குவது போன்றவை ஏற்படும்.
சிவப்பாக இருப்பவர்களின் கைகளில்தான் ஆரஞ்சு நிற புள்ளிகள் தெரியும். நமக்கு இருந்தாலும் அது பழுப்பு நிறத்திற்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது.
|