முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வாழை மரத்திற்கு தாலி கட்டும் சம்பிரதாயம் ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
‘ஒரு பிள்ளை பெற்றால் உடனே செத்தாள் அந்த உத்தமி யார’ என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது.

அதனால்தான் வாழைக்கு தாலி கட்டினால் களத்திர தோஷம் மற்றும் தார தோஷம் ஆகியவை நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

வாழையை பெண்ணாக எண்ணி, வாழைக்கு தாலி கட்டினால் ஒரு மனித பெண்ணைத் திருமணம் செய்யும்போது அதில் மண முறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

ஒரு சிலருக்கு ஜாதகத்தில் இரண்டு திருமணம் இருக்கும். இவர்களுக்கு இதுபோன்று செய்வது சிறந்தது.

அதாவது ஒருவருக்கு 8ம், 9ம் துணைவிக்கான ஸ்தானம். இந்த இடங்களில் பாவ கிரகங்கள் உட்கார்ந்திருந்தாலோ, சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தார தோஷ ஜாதகம் என்று கூறுகிறோம். தார தோஷம் என்றால் இவர்களுக்கு இரண்டாவது மனைவி உண்டு. அவர்கள் வாழைக்கு தாலி கட்டி வெட்டிவிட்டு, பிறகு திருமணம் செய்து கொண்டால் இரண்டாவது திருமணம் என்ற கணக்கு வந்துவிடும்.

கழுதைக்கு தாலி கட்டுவது

தேவலோகத்தில் எல்லாம் கழுதை தேவரின் வடிவம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் கழுதைக்கு தாலி கட்டினால் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

வேம்பு, அரசு சேர்த்து வைத்தாலும் மழை பெய்யும் என்று சொல்வார்கள். அதாவது அரச மரம் என்பது சிவனையும், வேம்பு அம்பாளையும் குறிக்கும்.

மேலும் அரச மரத்திற்கு அறிவியல் பூர்வமாக பார்த்தால் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதாவது அரச மரத்தின் காற்றிற்கு ஆண்களின் விந்தணுவை பெருக்கும் குணமும், விந்தணுவின் நீர்த்த தன்மையை நீக்கும் குணமும் உண்டு.

வேப்ப மரத்தில் இருந்து வரும் காற்றும் உடலுக்கு நல்லது. அதேபோல் மாமரத்தின் காற்றும் நல்லது.

அரச மரத்தையும், வேம்புவையும் ஒன்றாக நட்டு வைத்து அதற்கு தாலி கட்டினாலும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்குக் காரணம் சில மரங்களுக்கு சில சக்திகள் உண்டு.

வேறு சில அர்த்தங்களும் உண்டு. அதாவது வேப்ப மரமும், அரச மரமும் இருக்கும் இடத்திற்குச் சென்று தாலி கட்ட தார தோஷம் நீங்கும் என்று சொல்லும்போது, அதனை செய்வதால் ஆணின் மனதை திருமணத்திற்கு தயார் படுத்துகிறோம். அங்கு தாலி கட்டியதும் அவரது மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும். மனோகாரகன் வலுவடைகிறான்.

அனைத்து பரிகாரங்களும் மனிதனின் மனதை திருப்திப்படுத்துவதற்காகத்தான் செய்யப்படுகின்றன. மனது வலுவடைந்தாலே அவனது காரியங்கள் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை.


<< 1 | 2 
மேலும்
ஜோதிடப்படி விதி என்பதை எவ்வாறு வரையறுக்கலாம்?
சூரியனும் சனியும் பகைக் கோள்களாக சொல்லப்படுவது ஏன்?
குளிர்ச்சி தரும் கிரகங்கள்
கிரகங்களின் அதிதேவதை
அஷ்டமி, நவமி திதிகளில் எதையும் செய்யக்கூடாதா? ஏன்?
ராகு காலம், எமகண்டம் என்பது என்ன?