ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » மேஷம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து பல அனுபவங்களையும், உறவினர்களிடையே கருத்து மோதல்களையும், முன் கோபத்தையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்கிறார். பகைவரைப் போல் பார்த்தப் பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள்.கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.அதிக மதிப்பெண் பெறுவார்கள். உயர்கல்வி மற்றும் உத்யோகம் சம்பந்தமாக வேற்று மாநிலம், வெளிநாட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பீர்கள். எதையோ இழந்ததுபோல மன வருத்தத்துடன் வாடி வதங்கி நின்றீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். இனி கணவன் - மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும், என்றாலும் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வாகனச் செலவு, திடீர் பயணச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மின்னணு, மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும்.

15.12.2008 வரை புதனின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். 16.12.2008 முதல் 25.8.2009 வரை சனியின் சாரத்தில் செல்வதால் அக்காலக் கட்டத்தில் தர்ம கர்ம பலன்கள் நடைபெறும். 26.8.2009 முதல் 27.10.2009 முடிய உங்களின் யோகாதிபதியின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் எதிர்பாராத பண வரவு, திடீர்யோகம் உண்டாகும்.

பரிகாரம்:

திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவக்ர காளியம்மனையும், ஸ்ரீதேனாம்பிகை அம்மை உடனுறை ஸ்ரீசந்திர சேகரேஸ்வரரையும் அரளிப் பூ மாலை சாற்றி வணங்குங்கள்.