ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » கே‌ள்‌வி-ப‌தி‌ல் » ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் பெ‌ண்ணை மண‌ந்தா‌ல்... (Aayilam Star Girl Astrology)
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
Bookmark and Share Feedback Print
 
ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்:

இதெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது. மகம் என்றால் ஜகத்தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத்திரத்தில் பிறந்து மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.

கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனுக்கு பெண் பார்‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதாக‌க் கூ‌றினா‌ர். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா இருக்கிறேனே உங்களுக்குப் பிடிக்கலையா? என்றார்கள்.

மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாகமாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிதானே இதை எடுத்துத் தருகிறேன் என்று சொன்னேன்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

கடக ராசிக்கார்கள்தா‌ன் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்று மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆனால் ஆயில்யத்தில்தான் "ப்ளக்சிபிளிட்டி ஸ்டார்" என்று எங்க தாத்தா சொல்வார். எந்தத் தருணத்திலும் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நட்சத்திரம் அது.

யார் இதனுடைய அதிபதி?

புதன். புதனுடைய நட்சத்திரம். புதன் கூட்டுக் குடும்பங்கள், பாரம்பரிய பெருமைகள் இதையெல்லாம் காப்பாற்றுவதற்கு உரிய கிரகம். அது ந‌ன்றாக இரு‌ந்தா‌ல் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌‌த் த‌வி‌ர்‌க்கவே கூடாது. இ‌தி‌ல் ந‌ல்ல அ‌றிவா‌ளிக‌ள், பு‌த்‌திசா‌லிக‌ள், பெரு‌ம் பண‌க்கார‌ர்க‌ள், ‌நிறுவன‌ங்க‌ள் நட‌த்து‌கிறவ‌ர்க‌ள், அர‌சிய‌ல் தலைவ‌ர்‌க‌ள் இதுபோ‌ன்று பல கோண‌ங்க‌ளி‌ல் பல மேதைகளை நா‌ம் பா‌‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம்.

ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் பெ‌ண்க‌ள் 90 ‌விழு‌க்காடு, மாமனா‌ர், மா‌மியாரை ந‌ல்ல முறை‌யி‌ல் அனுச‌ரி‌த்து‌ப் போ‌கிறவர்க‌ள் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அதனா‌ல் ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் இரு‌க்கு‌ம் பெ‌ண்களை ஏ‌ற்று‌க் கொ‌ள்வது ந‌ல்லது. மா‌‌மியா‌ர் ‌ஸ்தான‌ம் ந‌‌ன்றாக இரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தி‌ப்பு இ‌ரு‌க்காது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஆயில்யம் நட்சத்திரம் பெண், மாமனார், மாமியார்