ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » கே‌ள்‌வி-ப‌தி‌ல் » எண் ஜோதிடத்தின் அடிப்படை என்ன? (What is Numerology)
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
Bookmark and Share Feedback Print
 
எண் ஜோதிடம். இப்பொழுது இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த எண் ஜோதிடத்தின் அடிப்படை என்ன? ஒவ்வொருவருடைய எண் என்பது எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒருவரின் விதி, எதிர்காலத்தை எண் ஜோதிடம் மூலம் துல்லியமாக அறிய முடியுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

WD
உலகெங்கும் பின்பற்றக் கூடிய ஜோதிடமாக இருக்ககிறது எண் ஜோதிடம். இது எளிமையானதும் கூட. அதில் குறிப்பாகப் பார்க்கும் போது சூரியனுக்கு 1, சந்திரனுக்கு 2, குருவிற்கு 3, ராகுவிற்கு 4, புதன் 5ஆம் எண், சுக்ரன் 6, கேதுவிற்கு 7, சனி பகவானுக்கு 8, செவ்வாய்க்கு 9 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த எண் ஜோதிடத்தில் விதிமுறைகள் மிக மிக எளிமையானதாக இருக்கிறது. ஜோதிடம் என்று எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட பாடல்கள் இருக்கிறது. சித்தர்கள் பாடிய பாடல்கள், மற்றவர்கள் பாடியது என்று இருக்கிறது. ஆனால் எண் ஜோதிடத்தில் உள்ளுக்குள் மூழ்கிப் போகிற மாதிரி எதுவும் கிடையாது. பிறந்த தேதி என்று எடுத்துக்கொண்டால் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறவி எண் 1. இதேபோல 6, 15, 24 என்றால் அவர்களின் பிறவி எண் 6. பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வருவது விதி எண்.

அதை கூட்டும் போது ஆயிரத்து தொள்ளாயிரத்து என்று கூட்ட வேண்டுமா?

அப்படியே கூட்டிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 1954 என்று வைத்துக் கொள்ளுங்கள், 1+9+5+4 = 24, பிறகு மாதத்தையும் நாளையும் கூட்டி மொத்தமாக, உதாரணத்திற்கு 55 என்று வருகிறதென்றால் 5+5 = 10 = 1.

தற்பொழுது நாம் எண் ஜோதிடம் பார்க்கிறோம், ஜோதிடமும் பார்க்கிறோம். பல எண் ஜோதிடர்கள், என்னுடைய அனுபவத்தில், சென்ற உடனேயே பெயரை எழுதச் சொல்வார்கள். பெயரை எழுதியவுடன் பெயர் சரியில்லை. A-வோ B-யோ சேர்த்து பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். பிறகு உங்களுடைய ராசியான எண், ராசியான தேதிகள், ராசியான ரத்தினம், ராசியான திசை, ராசியான வயது இதெல்லாம் உங்களுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இதற்குமேல் ஆழமாக செல்வதாக நாம் பார்த்ததில்லை.

இப்பொழுது, நிறுவனங்களுக்கு பெயர் சூட்டுதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல் என்று எண் ஜோதிடம் அடிப்படையில் 90 சதவீத மக்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல ராசியான எண்ணாகப் பார்த்து பையனுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்பது மாதிரி. ஜோதிடத்தைப் பொறுத்தவரையில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இந்தந்த எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்பது முறை. தற்பொழுது எண் ஜோதிட அடிப்படையில் கட்டங்களில் கணக்கிட்டு அந்த எழுத்தைவிட இந்த எழுத்து இருப்பது நல்லது என்று சொல்கிறோம். இதில் என்ன பெரிய குறை என்றால், பல எண் ஜோதிடர்களுக்கு ஜோதிடம் என்றால் என்னவென்றே தெரியாது!

இப்பொழுது, 1ஆம் எண் என்றால் சூரியன். 1ஆம் தேதியில் பிறந்த குழந்தைக்கு 1ஆம் எண்ணில் பெயர் வையுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் அந்த 1ஆம் எண்ணிற்குரிய சூரியன் ஒருவருடைய ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலோ, சனி, ராகு, கேதுவுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது மறைந்திருந்தாலோ அந்த 1ஆம் எண் அவர்களுக்கு வேலை செய்யாது. அந்த அளவிற்கு அவர்கள் ஆழமாகப் பார்ப்பதில்லை. அதனால் ஜாதகத்தையும் பார்க்க வேண்டும். கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு இரண்டையும் ஒப்பிட வேண்டும்.

இப்படி 1ஆம் எண்ணிலேயே பெயர் வைக்காமல், இந்த 1ஆம் எண்ணிற்குரிய சூரியன் வலுவிழந்து காணப்பட்டால், 3ஆம் எண், 9ஆம் எண்ணிற்குரிய கிரங்களையும் ராசிக் கட்டத்தில் ஆராய்ந்து ஆலோசனை வழங்கினால் பெரிய வெற்றியை அடையலாம்.

நம்மைப் பொறுத்தவரை நிறைய பேருக்கு ஜாதகத்தையும் பார்த்து, கை ரேகையையும் பார்த்து செய்துக் கொண்டிருக்கிறோம்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: எண் ஜோதிடம், ஜோதிடம், கப வித்யாதரன்