குடும்பத்தோடு வண்டி எடுத்துக் கொண்டு எங்கேயும் போகாதீர்கள் என்று சொன்னேன். அவ்வாறு போவதாக இருந்தால் ரயிலிலோ, பேருந்திலோ செல்லுங்கள். எல்லோரும் ஒன்றாகப் போகாதீர்கள் என்று சொல்லியிருந்தேன்.
அப்படி இருந்தும் அவர்கள் காஞ்புரத்தில் இருந்து திருவள்ளுர் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்டார்கள். எல்லோரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என்று சொன்னதற்காக அவர் மட்டும் தனியாக ஒரு வாகனத்தில் ஏறிக் கொண்டு குடும்பத்தாரை ஒரு வாகனத்தில் அனுப்பிவிட்டார்.
பாதி தூரம்தான் சென்றிருக்கும். அவரது குடும்பத்தார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அவரது பெண்ணைத் தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். தற்போது அந்த பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. பலருக்கும் நாம் முன்னெச்சரிக்கை கொடுக்கிறோம். இதுபோன்று சில தசாபுக்திகள் நடக்கும்போது குடும்பத்தோடு போகாதீர்கள். தனித்தனியாக போங்கள். இன்று இரண்டு பேர் போகட்டும். நாளை 2 பேர் கிளம்பி போங்கள். இல்லையென்றால் ரயிலில் செல்லுங்கள் என்று கூறுகிறோம். |