முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள் > அதிர்ஷ்டக் கல் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அதிர்ஷ்டக் கல் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

கற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கறகள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே.

ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும்.

ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது. பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும்.

எனவே ரேகையைப் பார்த்து அதிர்ஷ்டக் கல்லை தேர்ந்தெடுக்கிறோம்.

ஒரு சிலருக்கு புதன் நல்ல நிலையில் இருக்கிறது என்றால் கையில் புதன் மேடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்து அதற்குரிய கல்லான மரகத பச்சையைத் (எமரால்டு) தேர்வு செய்கிறோம்.

மரகதப் பச்சைக் கல்லை வாங்க முடியாதவர்களுக்கு அதே குணத்தில் உள்ள மற்றொருக் கல்லை பரிந்துரைக்கிறோம்.

புதன் நன்றாக இருக்கும். ஆனால் சுக்கிரன் பலவீனமாக இருக்கும். சுக்கிரன்தான் அதிர்ஷ்டக் கற்களுக்குரியவன். சுக்கிரன் பலவீனமாக இருப்பவர்களுக்கு ஜாதிக் கற்கள் அதாவது உண்மையான அதிர்ஷ்டக் கல்லைப் போடாமல், அதே வகையில் இருக்கும் கற்களைப் போடச் சொல்கிறோம்.

சிலர் எல்லாம் பணம் இருக்கிறது என்பதற்காக அதிர்ஷ்டக் கற்களை இஷ்டம் போல் வாங்கிப் போட்டுக் கொள்வார்கள். அதனால்தான் திடீர் விபத்து, மரணம் போன்றவை ஏற்படுகிறது.

எனவே அதிர்ஷ்டக் கல்லை சரியாக பார்த்து தேர்வு செய்து போட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

webdunia photoWD
ஒவ்வொரு ராசிக்கல்லிலும் பல கனிம, தாது உப்புக்கள் உள்ளன. அந்த கனிம, தாது உப்புக்களின் தன்மையை வைத்துத்தான் கல்லை தேர்வு செய்கிறோம்.

தற்போதெல்லாம் உண்மையான அதிர்ஷ்டக் கற்கள் கிடைப்பது அரிதாகிறது. ஆனால் உண்மையான அதிர்ஷ்டக் கற்களைப் போட்டால்தான் அதற்குரிய பலன் கிட்டும்.

ரூபி கல் இருக்கிறது. அதாவது மாணிக்கக் கல். அதில் என்ன தாதுக்கள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதில் அலுமினிய ஆக்ஸைட் தான் அதிகமாக இருக்கிறது. ஏ எல் 2 ஓ 3. அதை அடிப்படையாக வைத்து நம்முடைய உடம்பில் என்னென்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

நம்முடைய உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் அளவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
1 | 2 | 3  >>  
மேலும்
அயல்நாட்டவர்கள் 13ஆம் எண்ணைக் கண்டு பயப்படுவது ஏன்?
அஷ்டமத்து சனி என்றால் என்ன?
சனிக்கிழமையின் தாக்கம் பற்றி கூறுங்கள்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி நிச்சயம்: ஜோதிடம்
அணு சக்தி ஒப்பந்தத்தால் நன்மையில்லை: ஜோதிடர்!
ஐ.மு.கூட்டணி அரசு கவிழாது - ஜோதிடர் கணிப்பு!