முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
ராகு, கேது பெயர்ச்சிக்கு பொதுப்பலன் எப்படி சொல்வது?

100 விழுக்காடு சொல்லலாம். ஏனெனில் ராகுவின் குணம் அப்படி.

ராகுவும், கேதுவும் நேரெதிர் குணங்களைக் கொண்டவை, இவை இரண்டும் ஒரே நேரத்தில் பெயர்ச்சி அடைகின்றன. ஒவ்வொன்றும் 180 டிகிரி, 180 டிகிரி தொலைவில் இருக்கின்றன.

சூறாவளியைத்தானே ராகு, கேதுவிற்கு உதாரணமாகக் கொள்கிறோம். அப்படியேப் பார்த்தால் ராகு உச்சத்தில் பறந்து கொண்டிருக்கும் நான்கு காகிதம். கேது என்றால் கீழே சுழன்று கொண்டிருக்கும் காகிதம். மேலே பறக்கும் காகிதம் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலையும் தராது. தூசு மக்களின் கண்களில் படாது. ஆனால் வியப்பைத் தரும். அந்த காகிதம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்ற வியப்பைத் தரும்.

கீழ சுழல்கிற காகிதம்தான் போகிற வருகிறவர்கள் மீது பட்டு, கண்களை மறைத்து அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிடும்.

அதாவது தூசு என்பதும் காற்று என்பதும் ஒன்றுதான். ஆனால் மேலே பறக்கும் காகிதம் உடனடியாக எந்த கெடுதலையும் செய்வதில்லை. ஆனால் கீழே பறப்பது கெடுதலை செய்கிறது. இரண்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை.

சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகள் மனித சிந்தனையில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. சனி பகவான் என்று எடுத்துக் கொண்டால் மகரம், கும்பம் மட்டும்தான் சொந்த வீடு. மற்றவை எல்லாம் வேற்று கிரகங்களின் வீடுகளில்தான் பயணிக்கும். வேற்று கிரகங்களின் வீடுகளில் பயணம் செய்யும் போது மாற்று பலன்களை மனிதர்களுக்கு உருவாக்குகிறது.

சனிக்கு பகை வீடுகள் கடகமும், சிம்மமும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடகத்தில் இருந்தது. தற்போது சிம்மத்திற்கு வந்துள்ளது.

சனி தொழிலாளர்களுக்குரியவர். பகை வீட்டில் அமர்ந்திருக்கும்போது தொழிலாளர்களே கிடைக்க மாட்டார்கள். இது கன்னி, துலாம் வரைக்கும் இப்படியேத்தான் இருக்கும். விருட்சிகம் வரும்போதுதான் ஓரளவிற்கு தொழிலாளர்கள் தர‌ம் அ‌ல்லது நிலை குறையும். அதாவது கம்பெனி மூடுதல் போன்றவை ஏற்படும்.

குரு தங்கத்திற்குரியவர். சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருப்பதால் வரலாறு காணாத விலை உயர்வு. ஆனால் டிசம்பரில் நீச்சம் அடைகிறார். அப்போது தங்கத்தின் விலை குறையும்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் குரு நீச்சமடையும்போது நிதி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டன. தங்கத்தின் விலை குறைந்தது. பணத்தை ஏமாந்தவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இதுபோலத்தான் குருவும் ஒவ்வொரு கிரகத்தில் பயணிக்கும்போதும் ஒவ்வொரு நிலையை ஏற்படுத்தும்.

<< 1 | 2 | 3 | 4  >>  
மேலும்
இந்த ஆண்டு கோடைக்காலம் எ‌ப்படி? தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
மாநிலங்களவைத் தேர்தல் எப்படி இருக்கும்?
மனநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன?
தில்லை நடராஜர் கோயில் பிரச்சினை எதனால்?
தமிழ்நாடு : தேர்தல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும்!
பாகிஸ்தான் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆதரவான முடிவு வந்திருப்பது?