முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > ஆலோசனை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜோதிட அடிப்படையில் வீட்டில் மீன், செடிகள் வளர்ப்பது பற்றி?  Search similar articles
ஜோ‌திட ர‌த்னா முனை‌வ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

எதையும் நாங்கள் ராசி அடிப்படையில் தான் பார்க்கிறோம். மீன் என்றால் மீன ராசி.

webdunia photoWD
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் எல்லாம் வீட்டில் மீன் வளர்க்காமல் இருப்பது நல்லது. இவர்களுக்கு இது சரியாக இருக்காது.

மற்றவர்களுக்கு மீனம் என்கிற வீடு யோக வீடாக இருக்கும். எனவே மற்றவர்கள் மீன் வளர்க்கலாம்.

உதாரணமாக ஒருவர் பெசன்ட்நகரில் நிறைய பொருட்செலவில் பெரிய வீடு கட்டினார். 6 மாதம் கழித்து வீட்டில் மீன் தொட்டி வைத்தார்கள். அதில் இருந்து அவர்களுக்கு பிரச்சினை ஆரம்பித்தது. என்னிடம் வந்தார். அவர்களு‌க்கு பிரஷ்ணம் பார்த்ததில், வீட்டில் ஏதாவது லவ் பேர்ட்ஸ், மீன் வளர்க்கின்றீர்களா என்று கேட்டேன்.

ஆமாம், சமீபத்தில் தான் மீன் வளர்க்க ஆரம்பித்தோம். அப்போதில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பித்தது என்று அந்த பெண்மணி கூறினார். உடனடியாக அதை அகற்றி விடுங்கள் என்று சொன்னேன். அவர்களும் அதையே செய்தார்கள்.

எல்லாமும் எல்லாருக்கும் பொருந்தாது.

ஒரு பட அதிபர் வந்திருந்தார். தனுசு ராசிக்காரர். அவரு‌க்கு 6வது வீடாக ரிஷபம் இருந்தது. அவர் தனது படத்திற்கு காளை என்று பெயர் வைத்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை.

எதையும் நம்முடைய ராசிக்கு ஒத்து வருமா என்று பார்க்க வேண்டும்.

மீன் வளர்ப்பது என்பது எங்கு வளர்த்தாலும் சரியாக வராது. மீன் வளர்க்க ராசியில்லாதவர்கள் மீன் பண்ணை, இறால் பண்ணை வைத்து நஷ்டம் அடைந்தது எல்லாம் கதை உண்டு.

தாவரம் எல்லோரும் வளர்க்கலாம். ஆனால் முள் செடிகள் மட்டும் சிலருக்கு ஒத்து வராது. அதாவது ரோஜா செடி சிலருக்கு ஒத்து வராது. டிசம்பர் பூக்கள், கனகாம்பரம் போன்ற செடிகளை மேஷ ராசிக்காரர்கள் வளர்க்கக் கூடாது.

இது போன்றவற்றை சிலர் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லக் கூடும். ஆனால் ஒவ்வொரு பொருளும் அதற்கான தாக்கம் கொண்ட மனிதர்களை வீட்டிற்குள் கொண்டு வந்துவிடும்.

மேஷ ராசிக்காரர்கள் கனகாம்பரமோ, டிசம்பர் செடியையோ வைத்தால் எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்துவிடுவார்கள். அந்த செடிகளை..
1 | 2  >>  
மேலும்
‌திரை‌த்துறை‌யின‌ரி‌ன் ‌விவாகர‌‌த்துக‌ள்?
பிறந்தநாளை தேதியில் கொண்டாடலாமா? நட்சத்திரத்தில் கொண்டாடலாமா?
மனிதனின் குணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கக் காரணம்?
சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும்?
குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?
ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை!