,, படி படி என்று சொல்வார்கள். இதையெல்லாம் தவிர்க்கலாம்.
பெற்றோரின் வற்புறுத்தலை திணிக்காமல், பிள்ளைகளின் கிரக நடப்பை வைத்து அவர்களது வருங்காலத்தை தீர்மானிப்பது சிறந்தது.
அவனுக்கு உகந்த படிப்பில் சேர்த்துவிட்டால், அதிலேயே அவன் சிறந்து படித்து, மேல் படிப்பைத் தொடர்ந்து, அந்த துறையிலேயே வேலை கிடைத்து பெரும் பணம் சம்பாதிக்க முடியும். மாறுபட்டுவிட்டால் கால விரையம்தான் ஆகும்.
நேற்று ஒரு குழந்தையின் ஜாதகத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த குழந்தைக்கு அஷ்டமத்து சனியும், சனி தசையும் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.
அஷ்டமத்து சனியும், சனி தசையும் நடக்கும் பிள்ளைகளுக்கு விளையாட்டு மூலமாக கற்பிக்க வேண்டும். அந்த நாட்களில் அவன் கண்மூடித்தனமாக இருப்பார்.
விளையாட்டு முறையிலான கற்பித்தல் அவனுக்குத் தேவைப்படும். அதாவது ஆடு என்றால் ஆட்டை அவனுக்குக் காண்பித்துத்தான் கற்றுத்தர வேண்டும். அதேப்போல வீட்டிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டு அதனை அறிந்து அவனுக்கேற்ற வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளையை புரிந்து கொள்ளாமல் அப்போது படித்தானே, இப்போது படிக்க மாட்டேன் என்கின்றானே என்று புலம்பாமல் அவனுக்கேற்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவனுக்கேற்ற உணவு, உபச்சாரம் செய்ய வேண்டும்.
இதனைச் செய்தாலே எல்லா பிள்ளைகளும் நன்றாக படிப்பார்கள்.
சிறிய வயதுப் பிள்ளைகள் வயதுக்கு மீறி பேசும்போது பெற்றோர்கள் திட்டுவது பற்றி?
அதாவது பெற்றோரின் எதிர் ராசியில் பிள்ளைகள் பிறந்தால் எப்போதும் அப்பாக்கும், பிள்ளைக்கும் சண்டைதான்.
சமீபத்தில் கூட ஒரு அம்மாவும் பிள்ளையும் வந்தார்கள். பையன் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி. அப்பா பூச நட்சத்திரம் கடக ராசி. அப்பாவின் 6வது ராசியில் மகன், மகனுக்கு 8வது ராசியில் அப்பா. இந்த பூச நட்சத்திரத்தில் பிறந்த அப்பா, தெரு விளக்கில் உட்கார்ந்து படித்தேன், கிழிந்த ஆடை போட்டிருந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள்.
அவிட்டத்தின் குணம் எப்படின்னா... முடிஞ்சது முடிஞ்சுப் போச்சு, அடுத்தது என்ன என்று போய்க்கொண்டே இருப்பான். இதில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகி கைகலப்பாகிவிட்டது.
பெற்றோரின் 5ஆம் இடம் புத்திர ஸ்தானம். 5ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் குழந்தை பிறப்பது தாமதமாகும். கோயில் கோயிலாக போய் விரதமிருந்து குழந்தைப் பேறு பெறுவார்கள். பிறந்த பிறகு அது குறை இது பிரச்சினை என்று புலம்புவார்கள்.
புத்திர ஸ்தானம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு பிள்ளையே இல்லை என்பது ஜாதக முறை. ஏதோ புண்ணியத்தால் பிள்ளைப்பேறு கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு திருப்தி அடைந்து கொள்ள வேண்டும்.
அந்த குழந்தையிடம் என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிக்கொணர வேண்டும். அதுதான் பெற்றோரின் வேலை. அதை விடுத்து அவனை குறை சொல்வது தவறு.
எனவே பெற்றோர் தான் பிள்ளைகளின் கிரக அமைப்புகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு அந்த வழியில் சென்று அவனை பெரிய கல்வியாளராக மாற்ற முயல வேண்டும்.
|