முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > ஆலோசனை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருப்பதியில் திருமணமான 3 மணி நேரத்தில் பொறியாளர் மாப்பிள்ளை இறந்தது பற்றி?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
தாய்-தந்தைக்கு இறுதி காரியங்கள் செய்து முடித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்ளும் யோகம் இருக்கும். எனவே, இதையெல்லாம் அந்த பெற்றோரிடம் சொன்னால் அது அவர்களை பாதிக்கும். எனவே இப்போதைக்கு இவர்களுக்கு திருமணம் வேண்டாம், கொஞ்ச காலத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பிவிடுகிறோம்.

சில ஜாதகங்களில் திருமணம் முடிந்ததும் மரணம் சம்பவிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். சமீபத்தில் ஒரு ஜாதகம் வந்தது. அவருக்கு அப்படித்தான் இருந்தது. அதனால் அவருக்கு திருமணம் வேண்டாம், சேர்க்கை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவரது பெற்றோர் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாகக் கூறினார்.

உங்கள் ஜாதகப்படி தாலி கட்டியதும் நீங்கள் இறந்து விடுவீர்கள், அதனால் திருமணம் வேண்டாம். நீங்கள் விரும்பும் பெண்ணுடன் சேர்ந்து வாழுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதன்படியே அவரும் இருக்கிறார். தாலி கட்டாமல் செயினோ அல்லது மோதிரமோ மாற்றிக் கொள்ளுங்கள். சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடிச் செல்லுங்கள். அங்கு சுவாமி முன்னிலையில் சாமி டாலர் பொருத்திய செயினை மாற்றிக் கொள்ளுங்கள். மாலை மாற்றிக் கொள்வதற்கு பதிலாக செயினை மாற்றிக் கொள்ளுங்கள், போதும் என்று சொல்லிவிட்டேன்.

அதாவது அவரது ஜாதகத்தில் 7வது வீட்டில் சனி, 8வது வீட்டில் ராகு, 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளது. இந்த சேர்க்கையில் முதலில் அட்சதைப் போட்டால், உடனடியாக வாய்க்கரிசி போடும் நிலை ஏற்படும் என்பதை அவரிடம் விளக்கமாகக் கூறினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

மரணம் என்பது விதிக்கப்பட்ட ஒன்று, அதனை இவ்வாறு தவிர்க்க இயலுமா?

முடியும். திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று என்று நாம் கருதுகிறோம். ஆனால் திருமணம் முடிந்ததும் இறந்துவிடும் ஜாதகங்கள் இருக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடுவதால் இறப்பையும் தள்ளிப்போடலாம்.

இயற்கையில் அவ்வாறு செய்ய முடியும். அதாவது மரணத்தைத் தள்ளிப்போட தள்ளிப்போட அது வேறு யாரையாவது எடுத்துக் கொண்டு மரணத்தை சமனிலை செய்து கொண்டே இருக்கும். புட்டபர்த்தி சாய் பாபா வாயில் இருந்து செயினை எடுக்கிறார் என்றால், அது எங்கோ ஒரு இடத்தில் இருந்துதான் வருகிறது. இல்லாத ஒன்று புதிதாக தோன்றி வருவதில்லை. எதாவது ஒரு நகைக் கடையில் இருந்துதான் அது வருகிறது. பின்னர் அது சரிகட்டப்படும். அதுபோன்றுதான் மரணமும்.

இதற்கு உதாரணமாக ஒரு சில வீடுகளில் திடீரென விலங்குகள் இறக்கும். அதனை அந்த வீட்டிற்கு வந்த ஏதாவது துர் மரணத்திற்கு அந்த விலங்கு இறந்துவிட்டது என்று சொல்வார்கள். இதனால்தான் கிராமங்களில் இறப்பு விகிதம் குறைவு. அவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர். ஆடு, மாடு, நாய் என்று பலவற்றை வளர்ப்பதால் அவர்களை தாக்க வரும் மரணத்தை ஆடு, மாடு, நாய்கள் ஏற்றுக் கொண்டு இறக்கின்றன.

மாட்டுக் கண்களில் கண்ணீர் வடியும்போதே ஏதோ ஒரு துர்மரணம் நிகழப்போகிறது என்று தெரிந்து கொள்வார்கள். எஜமானனை நோக்கி வரும் மரணத்தை இந்த விலங்குகள் போராடி தங்கள் உயிரைக் கொடுத்து எஜமானனைக் காப்பாற்றும்.

இது நகர வாழ்க்கையில் மிகக் குறைவு.
<< 1 | 2 
மேலும்
எந்த நேரத்தில் திருமணம் செய்யலாம்?
‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!
க‌ல்‌வியை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் ஜோ‌திட ‌ரீ‌தியாக எ‌வ்வாறு பா‌ர்‌‌க்‌கி‌றீ‌ர்க‌ள்?
அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?
ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி, குரு‌ப்பெய‌ர்‌ச்‌சி தொட‌ர்பான பரிகாரம்!
பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை?