முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > ஆலோசனை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருப்பதியில் திருமணமான 3 மணி நேரத்தில் பொறியாளர் மாப்பிள்ளை இறந்தது பற்றி?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

இந்த திருமணத்தில் ஜோதிடம் பார்க்கப்பட்டதா இல்லையா என்பதை நம்மால் கூற இயலாது. பொதுவாக ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்று இருக்கும். எந்த தசா புக்தி நடக்கும் போது திருமணம் செய்ய வேண்டும், எந்த தசா புக்தி நடக்கும் போது செய்யக் கூடாது என்பதெல்லாம் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. குரு பலம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள். தசா புக்தியைப் பற்றி கவலைப்படுவதில்லை.

webdunia photoFILE
ராகு, கேது புக்தி, சனி தசையில் கேது புக்தி, 8க்குரிய புக்தி, 12க்குரிய தசா புக்தி ஆகியவை நடக்கும் போது திருமணம் செய்தால்தான் இதுபோன்ற அகால மரணத்தைக் கொடுக்கும். மேலும் சந்திராஷ்டமத்திலும் தாலி கட்டக் கூடாது. பெண்ணுக்கோ ஆணுக்கோ சந்திராஷ்டமம் நடக்கும்போது தாலி கட்டுதல் கூடாது.

விபத்துத் தாரை என்று சொல்லப்படுவது உண்டு. சந்திரனை வைத்து அவர்களது நட்சத்திரங்களை கணித்து தாராப் பலன் சொல்வார்கள். தாராப் பலன் இல்லாத நாட்களிலும் திருமணம் செய்யக் கூடாது.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால் மாங்கல்ய தாரணம் நடக்கும் அந்த லக்னத்தில் 7வது 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது. அப்படி ஒரு லக்னத்தில் தாலி கட்டப்பட்டாலும் உடனடி மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது.

சரள லக்னம் என்று சொல்லப்படுகிறது. மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரள குணங்கள் கொண்டவை.

சரள குணங்களாக லக்னங்கள் அமைந்து அந்த லக்னத்தின் 7வது அல்லது 8வது இடங்களில் சனி, ராகு, கேது, சூரியன் போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் 24 மணி நேரத்திலேயே மரணம் சம்பவிக்கும். இதனை அனுபவத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம்.

அதாவது திருமணம் முடிந்து மணமக்கள் வீடு செல்லும்போது விபத்தில் மரணம் போன்ற செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். அவை இதுபோன்ற நேரங்களில் நடந்திருக்கும்.

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது அவர்களது ஆயுளை முதலில் பார்க்க வேண்டுமா?

ஜாதகப் பொருத்தம் பார்க்க வருபவர்களுக்கு முதலில் ஆயுள் காலத்தையும் பார்க்க வேண்டும். திருமணத்திற்கான தசா புக்தி இருக்கிறதா என்பது போன்றவற்றையும் பார்க்க வேண்டும்.

அதாவது திருமண பொருத்தம் பார்க்க வரும் ஜாதகத்தில் தற்போது திருமணத்திற்கான தசா புக்தியே நடக்கவில்லை, இந்த ஜாதகத்திற்கு தற்போது அதற்குரிய பலன் வரவில்லை என்று கூறுவோம். ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்று சொல்லிவிடுவோம்.

ஒரு சில வயதான பெற்றோர்கள் தாங்கள் இருக்கும்போதே தனது பிள்ளைக்கு திருமணம் செய்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணி வருகின்றனர். ஆனால் அவர்களிடம் இப்போது திருமணம் செய்து வைத்தால் மரணம் சம்பவிக்கும் என்று கூறுவதில்லை. ஒரு சிலரின் ஜாதகத்தில் தாய்-தந்தை இருவரும் சேர்ந்து அட்சதை போடுவதற்கு வாய்ப்பு இருக்காது. அதுபோன்ற ஜாதகங்களும் உண்டு.
1 | 2  >>  
மேலும்
எந்த நேரத்தில் திருமணம் செய்யலாம்?
‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!
க‌ல்‌வியை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் ஜோ‌திட ‌ரீ‌தியாக எ‌வ்வாறு பா‌ர்‌‌க்‌கி‌றீ‌ர்க‌ள்?
அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?
ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி, குரு‌ப்பெய‌ர்‌ச்‌சி தொட‌ர்பான பரிகாரம்!
பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை?