சனி திசை நடந்தாலே ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். அப்ப நாம் அருகில இருந்து, உன்னைப் போல யாருமே இல்லை, யு ஆர் வெரி கிரேட் அவங்க சொல்வதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே, அம்மா நான் இருக்கேன், உன்னைப் பத்தி எனக்குதான் தெரியும் என்று கூற வேண்டும்.
சனி திசை நடக்கும் போது வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். பொதுவாகவே சனி கிரகம் கார்பன், கார்பன் டை ஆக்சைடால ஆனது. அதனால ஒரு சோம்பல் வரும். அதனால அந்தக் வெளிக்காற்று, பிராண வாயு உள்ளே போகும்போது இயல்பாவே ஒரு சுறுசுறுப்பு வரும். சனி திசை நடக்கிற பிள்ளைங்களுக்கு தெரிஞ்சதுல இருந்து தெரியாததுல வரணும்.
அவர்களுக்கென்று ஒரு பாடத்திட்டத்தையே உருவாக்க வேண்டும். மேஷ ராசியா அந்தப் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர். ரிஷப ராசின்னா அவங்கள இந்தப் பள்ளியில் சேர். இங்கு ரிஷப ராசி மாணவ மாணவிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனி பள்ளிகளேத் துவக்கலாம். ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரங்களுடைய கற்கும் திறனும் வித்தியாசப்படும். நாம அதுல ஆசியராக இருந்தா அந்த கற்கும் திறனை அறிந்து அதற்கேற்ப கற்பிக்கலாம்.
சில பிள்ளைகள் எல்லாம் 6 வயசு, 7 வயசுலேயே ஒரு மாதிரி இருப்பார்கள். அப்பவே சிலருக்கு திமிரெல்லாம் இருக்கும். அதைத்தான் விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு சொல்வார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் எல்லாம் வேகமாகப் படிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் சப்ஜெக்ட்ட தாண்டி யோசிப்பாங்க. தொடர்புகளை பார்ப்பார்கள். மிதுன ராசி பிள்ளைங்கள் எல்லாம் இப்போதைக்கு ஓ.கே. இது போதும்னு யோசிப்பாங்க. கடக ராசிப் பசங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா இதை செஞ்சு பார்த்தா எப்படி இருக்கும் என்று ப்ராக்டிக்கல்லா யோசிப்பாங்க. ஒரு ஆசிரியருக்கு ஜோதிடம் பற்றி தெரிஞ்சதுன்னா பிரம்மாண்டமா அந்தப் பையனை தட்டிக்கொடுத்து ஆக்கலாம். இதை பேஸ் பண்ணிதான் அவன் கேள்வியே எழுப்புவான். ஒரு கரும்பு பற்றி பாடத்தை நடத்திக்கிட்டு இருக்கும்போது எப்படியெல்லாம் கேள்விகள் எழுகிறேதா அதை வைத்தே அவனை எந்த ராசின்னு கண்டுபிடிக்கலாம். எல்லாமே கற்றல்தான்.
ஆனால் தற்போதைய பாடத்திட்டத்தை மாற்ற முடியாது. மேஷ ராசிக்கு ஒரு சிலபஸ் கொடுய்யான்னு அரசிடம் கேட்க முடியாது. மாணவர்களுக்கு கற்றல் இருந்தாலும், ஆசியருக்கு கற்பித்தல் இருந்தாலும் எளிமையாகும். இப்ப சனி திசை நடக்கிற பிள்ளைகளைப் பார்த்தால், அவனெல்லாம் கடைசியில் இருந்துதான் வருவான். அவன் ஸ்டார்ட்டிங்ல தூங்கிடுவான். கடைசியில வந்து என்ன சார் சொன்னீங்க அப்படீன்னுவான். எனவே அப்ப அவனுக்கு என்னவாகும் மத்தவங்க சொல்றது நம்மளுக்கு புரிய மாட்டேங்குது அப்படீன்னு நினைப்பான். அவனையும் பங்கேற்க வைக்க வேண்டும். துவங்கும்போதே காலைல என்ன சாப்பிட்டாய், இது என்ன தெரியுமா அப்படின்னு பேசவிட்டுடனும். அவனுக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் சொல்ற வரைக்கும் தூங்கிடுவான். அவனுக்கு தெரியாத சப்ஜெக்ட் சொல்லும்போது மட்டும்தான் சார் என்ன சார் சொன்னீங்க அப்டீன்னுவான். அவனைப் பற்றி ஆசிரியர்கள் தெரிஞ்சு வச்சிருந்தா நல்லாயிருக்கும்.
அதே போல அவங்களுக்கு பிடிச்சமாதிரி உணவு வகைகளை தேர்வு செஞ்சு கொடுக்கணும். இந்தந்த திசை நடக்கும் போது இன்னன்ன சத்துக்கள் எல்லாம் உடம்பில் குறையும். சனி திசை நடக்கும் போது இரும்புச் சத்து குறையும். செவ்வாய் திசை நடக்கும் போது சுண்ணாம்புச் சத்து குறையும். அதை தெரிஞ்சு சத்துணவிற்கு முக்கியத்துவம் தந்து, காலையிலேயே குழந்தைகளுக்கு உணவு தரும் பள்ளிகள் எல்லாம் இருக்கின்றன. அதில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.
|