இதை எந்த இடத்தில் செய்ய வேண்டும்?
பால பருவத்திலேயே அதை நாம் தேர்வு செய்யறது நல்லது. ஒரு குடும்பம் வந்திருந்தாங்க. அந்தக் குழந்தைக்கு செவ்வாய் உச்சம், குரு ஆட்சி, இந்திய அரசமைப்புச் சட்டம், ஆட்சி அதுக்கான கோள்களெல்லாம் நல்லா இருந்தது. அதை பார்த்துட்டு ஐ.ஏ.எஸ். படிக்க வையுங்கள்னு சொன்னோம். அதுக்கு தகுந்தமாதிரி புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறது, எப்பவும் நியூஸ் பேப்பர் படிக்க வைக்கிறோம் அப்படிங்கறாங்க.
பால பருவத்தில் இதைச் செய்யாதவர்கள் குறைந்தபட்சம் 13, 14வது வயதுல, அதாவது 10வது முடிச்சு 11வது சேரும் போது மாணவர்கள் விருப்பப் பாடத்தை தேர்வு செய்கிறார்கள். அந்த நேரத்தில் சரியான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் முக்கியம். அந்த நிலையில்தான் நிறைய பேர் நம்மை அணுகுகிறார்கள். சில பேர் பிறக்கும் போதே ஜாதகத்தை கணிச்சு செய்கிறார்கள்.
குழந்தை பிறக்கும் போதே எந்தத் துறையில சேர்க்கலாம்னு முடிவு செய்கிறார்கள். அதற்கேற்ற பள்ளியைத் தேர்வு செய்து சேர்க்கின்றோம் என்று கூறுகிறார்கள்.
மற்றவங்களெல்லாம், அதாவது அப்பா ஒரு துறை, அம்மா ஒரு துறைன்னு இருக்கிறவங்களெல்லாம் 10வது முடிச்சு 11வது சேரும் போது எந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிய வருகிறார்கள்.
இப்படி பார்க்கும் போது அந்த ஜாதகருக்கு ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடந்து கொண்டிருந்தால் அவரின் அறிவுத்திறன் குறையும். அதாவது நன்றாக படித்திருப்பார். ஆனால் சரியாக எழுதியிருக்க மாட்டார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி கல்விப் பருவத்தில் குறுக்கிட்டால் கல்வியின் மீதான கவனம் முழுமையாக இருக்காது. இதை நன்கு உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும்.
"நேத்து கூட ஒரு ·பேமிலி வந்திருந்தாங்க. அந்தப் பையனுக்கு சிம்ம ராசி. 3 வருசமாக சிம்ம ராசிக்கு ஏழரை சனி நடந்து வருகிறது. மிகச் சிறப்பாக படித்துக் கொண்டிருந்தான் அந்தப் பையன். ஆனால் ஏழரை சனி ஆரம்பிக்கும் போது ரொம்ப வற்புறுத்தாதீங்க, அடிக்காதீங்க அப்படின்னு சொல்லியிருந்தேன். சரி சி.பி.எஸ்.சி.யில இருந்து ஸ்டேட் போர்டுக்கு மாத்திடுங்கன்னும் சொல்லியிருந்தேன். ஏன்னா போர்ஷன் குறையும். அப்புறம் ரொம்ப அடிச்சு கற்றுத் தரும் பள்ளியில எல்லாம் சேர்க்காதீங்க அப்படின்னு சொன்னேன்.
புகழ்பெற்ற ஸ்கூலான டி.ஏ.வி.ல படிக்கிறான். அவனுக்கு சனி திசை. அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறான். ஏழரை சனி இவனுக்கு மறதி, மந்தம், தூக்கம் எல்லாம் கொடுக்கும். இவனுக்கு விளையாட்டு வசதி இருக்கிற மாதிரி ஒரு ஸ்கூலா பார்த்து சேருங்க. உடனே அந்தப் பையனோட அப்பா, அம்மா அழுதாங்க, அப்படிதாங்க நினைச்சோம், ஆனால் இந்த ஸ்கூல்ல படின்னு அடிச்சு இப்ப இந்த மாதிரி (மனநிலை பாதிப்பு) ஆகிவிட்டது. இப்ப மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கான் என்று வருத்தத்துடன் கூறினார்கள்.
ஆக, 2, 4, 9 ஆம் இடத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், இந்தக் காலப் பருவத்தில், விடலைப் பருவத்தில் எந்த தசாபுத்தி நடக்கிறது என்று பார்க்க வேண்டும். கல்வியில ஈடுபாடுள்ள, ஈர்ப்பு சக்தியுள்ள, நினைவாற்றல் தூண்டக்கூடிய கிரக அமைப்புகள் தசாபுத்தியில் நடக்கிறது என்றால் எவ்வளவு பெரிய சவாலான படிப்பாக இருந்தாலும் நாம அவனைச் சேர்க்கலாம்.
இல்லையென்றால் குழந்தையினுடைய ஜாதகத்தை வச்சு எடை போடலாம். மந்த திசை நடந்தால், அப்ப அதற்கேற்ற மாதிரி சாதாரண பள்ளியில் சேர்க்கலாம்.
சமூகத்தில் நம்முடைய உயர் நிலையை அடிப்படையாகக் கொண்டு வாயைத் திறந்தாலே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை எல்லாம் தவிர்க்க வேண்டும். கிரகங்களின் பாதிப்பு இருக்கும்போது அவன் பாதை மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவர்கள் கொடுத்த அழுத்தத்தினால், அந்தப் பையன் ஏ.பி.சி.டி. உச்சரிக்கறான். அப்பறமா நான் சொன்னது சரிதானான்னு கேட்கிறான். அப்ப அவனுக்கே அவன் மேல நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எல்லா சப்ஜெக்ட் ஆசியர்களும் டல் ஸ்டூடண்ட் டல் ஸ்டூடண்ட்னு நோட் எழுதி அனுப்பி அதில் அவன் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சனி திசை வந்தாலே இழுக்கு, ஏளனப்படுத்தப்படுதல், அவமானப்படுதல் ஆகியவற்றைக் கொடுக்கும். அதே சனி பிற்பகுதியில் அவமானத்தை வெகுமானமாக மாற்றும்.
|