டீன் ஏஜ் பெண்ணுடன் ஆபாச புகைப்படத்தில் விஷால்? கைது செய்யப்பட்ட பெண்!

Last Updated: வியாழன், 13 ஜூன் 2019 (11:23 IST)
பள்ளி செல்லும் சிறுமி ஒருவரை நடிகர் விஷாலுடன் தொடர்ப்புபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகறாரில் தர்ஷினி என்னும் பெண், சண்டையிட்ட பெண்ணின் பள்ளி செல்லும் மகளை நடிகர் விஷாலுசன் தொடர்புபடுத்தி, சமூக வலைத்தளங்களில் ஆபாட புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டார். 
 
இதை சிறுமியின் தாயாரின் கவனத்திற்கு செல்ல உடனடியாக அவர் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு அங்கிருந்து பின்னர் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சைபர் கிரைம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்ஷினியை தேடி வந்த நிலையில், திருச்சங்கோட்டில் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். 
 
அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்ட தர்ஷினி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :