கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் - பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST)
சென்னை மேற்கு மாம்பலம் குமரன் நகர், முத்தாரம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி சுதா (58). இவர், கடந்த 30 ஆண்டுகளாக தனது கணவரைப் பிரிந்து தனியாகவே வசித்து வந்துள்ளார்.
 
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த லட்சுமி சுதா, கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மகன் கார்த்திக் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் லட்சுமி சுதாவின் சகோதரி வித்யா அருள்மணி அவரை பார்ப்பதற்காக வந்தார். வெகுநேரமாக கதவை திறந்தும் திறக்காததால், சந்தேகமடைந்த வித்யா மூடியிருந்த கதவை தள்ளிய போது திறந்து கொண்டது.
 
உள்ளே சென்று பார்த்தபோது, லட்சுமி சுதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, முதுகுப்பகுதி, இடுப்பு என பல இடங்களில் கத்தியால் குத்தியதற்கான காயங்கள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வித்யா கதறியழுதார்.
 
இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலை கள்ளக்காதலால் நடந்தது தெரியவந்தது.
 
மசாஜ் செண்டர் நடத்தி வந்த நுலம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் எனபவருக்கும், லட்சுமி சுதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது தோழி ஒருவர் மூலம் பழக்கமான கார்த்திகேயனுக்கு கணவனை பிரிந்து தனிமையில் வாடிய சுதா வசமாக சிக்கினார்.
 
இருவருக்கும் இடையேயான உறவு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சுதாவின் மகனும் பெங்களூருவில் உள்ளதால், இருவரும் அடிக்கடி லட்சுமி சுதா வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள கார்த்திகேயன், ’கடந்த ஆண்டு தனக்கு திருமணமானது. இதனால் அடிக்கடி லட்சுமி சுதாவுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை, அதனால் லட்சுமி சுதா கோபப்படுவார்.  எனக்கும் அவர் கசந்து போனார். ஒழுங்காக இல்லற வாழ்க்கையில் ஈடுபட நினைத்து ஒதுங்கி போனேன்
 
இந்நிலையில் 31 ஆம் தேதி அவர் வீட்டுக்கு போனேன். மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்தினார். பின்னர் உறவுக்கு அழைத்தார். நான் மறுத்ததும் கள்ளதொடர்பை வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் கத்தியில் குத்தி கொன்றேன்” என்று தெரிவித்துள்ளார். காவல் துறையினர் கார்த்திகேயனை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :