வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (10:40 IST)

விநாயகர் சிலை நீரில் கரைப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“களிமண்ணால் செய்யப்பட்டதும், எந்தவித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சிலைகள், ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் நீரில் கரைக்க அனுமதிக்கப்படும்.

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விதிமுறைகளின்படி நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்“ என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.