ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 29 அக்டோபர் 2016 (16:37 IST)

இலங்கை தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க துடிக்கும் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் வர்ஷன் இலங்கை தமிழர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

 
''புறம்போக்கு'' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இசையமைப்பாளர் வர்ஷன் தனது புதிய படத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார்.
 
அவர் அது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வர்ஷன், ''கடந்த 2006ஆம் ஆண்டு முதற்கொண்டு 10 வருடங்களாக கடல்கடந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக இலங்கை தமிழர்கள் ஏற்பாடு செய்த பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனவே அவர்களுக்கு செய்யும் நன்றி கடனாக, எனது திரைப்படங்களில் ஒரு பாடகர் மற்றும் பாடகிக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன். 
 

 
யார் சிறப்பாக பாடுகிறார்களோ, அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' என அறிவித்துள்ளார்.
 
பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் வர்ஷனின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைக் குவிக்கிறது.
 
வர்ஷனின் இமெயில்: [email protected]