திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:50 IST)

ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை. வானதி சீனிவாசன்

ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கோவையில் பாஜக சார்பில் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை செய்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பொன்முடி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ’பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர் உள்ளிட்டவரை காப்பாற்றுவதற்காக பாடுபடும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva