1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (12:13 IST)

தனித்தேர்வர்களுக்கு தனியா தேர்வா? ஆல்பாஸ் போடுங்க! – வானதி சீனிவாசன் கோரிக்கை!

தமிழகத்தில் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்ததை போல தனித்தேர்வர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்க வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் நிறைவு இல்லையென்றாம் மாணவர்கள் மதிப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி வழியாக படித்தவர்கள் தவிர்த்த தனி தேர்வர்களுக்கு அக்டோபரில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி வானதி சீனிவாசன் “தனித்தேர்வர்களுக்கு அக்டோபரில் தேர்வு நடத்தி நவம்பரில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அவர்கள் கல்லூரிகளில் சேர முடியாமல் பாதிக்கப்படுவார்கள். எனவே ஒன்றரை லட்சம் தனித்தேர்வு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேர்ச்சி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.