ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (08:15 IST)

3 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னையில் தடுப்பூசி முகாம் கடந்த திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவில்லை என்பதை அடுத்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றின் படி இன்று சென்னையில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் பொது மக்கள் தடுப்பூசி முகாம் சென்று தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஆன்லைன் பதிவு தேவை இல்லை என்றும் ஆதார் அட்டையை எடுத்து கொண்டு சென்று நேரடியாக தடுப்பூசி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மூன்று நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று சென்னையில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதை அடுத்து பொதுமக்கள் என்ற ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் எந்த நேரத்திலும் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்குள் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது