சினிமாலிருந்து வந்து ஸ்டாலின் தோளில் அமர்ந்தவர் உதயநிதி... அமைச்சர் குற்றச்சாட்டு

Udhayanithi Stalin
Sinoj| Last Updated: புதன், 2 டிசம்பர் 2020 (17:44 IST)

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக இளைஞரணி செயலர் உதயநிதியை விமர்சித்துள்ளார்.

இன்று சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ள்ளிட்ட நகராட்சிகளின் குடிநீர் திட்டத்தையொட்டி தாமிரபரணி ஆற்றின் நீரைக்கொண்டு வரும் பண்யை அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர்
செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

அதிமுகவில் உள்ள அனைவரும் படிப்படியாகப் பதவிக்கு வந்தவர்கள். உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துவிட்டு நேரடியாக வந்து ஸ்டாலின் தோளில் அமர்ந்தனர். அவரைக் கண்டு அக்கட்சியில் பழைமையான தலைவர்கள் கைகட்டி நிற்கிறார்கள் எனத் தெரிவித்தார்.


மேலும், அடுத்தவருடம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்
வரவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் ஜெயிக்க வேண்டிய ம்முனிஅப்பு காட்டி வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி கைதாகி விடுதலை ஆனார்
என்பதும்
குறிப்பிடத்தகக்து.இதில் மேலும் படிக்கவும் :