ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (09:45 IST)

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த நேசமணி பிறந்த நாள்: டிடிவி தினகரன் வாழ்த்து..!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், மாநில உரிமைக்காகவும் போராடிய மார்ஷல் நேசமணியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வஎரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
 
இயல்பிலேயே போராட்ட குணம் கொண்டவராகத் திகழ்ந்த திரு.நேசமணி அவர்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட இருந்த கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் சேர்க்க மக்களை திரட்டி போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர்.
 
வளமிக்க குமரியை மீட்டெடுத்ததால் தென்மாவட்ட மக்களால் மார்ஷல் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். பெருமைக்குரிய திரு.நேசமணியின் பிறந்த நாளில் அவரது விடாமுயற்சியுடன் கூடிய போராட்ட குணம், தமிழ் மொழி, மாநில பற்று ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
 
Edited by Siva