அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்! – டிடிவி தினகரன் அறிக்கை

Prasanth Karthick| Last Modified திங்கள், 22 பிப்ரவரி 2021 (10:30 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமமுக பொதுக்குழு கூட்டம் குறித்து டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக கட்சி தேர்தல் பணிகளில் தற்போது மும்முரமாக களமிறங்க தொடங்கியுள்ளது. சசிக்கலா வருகைக்காக காத்திருந்த அமமுக தற்போது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்த உள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள டிடிவி தினகரன் “இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.” என தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது சசிக்கலா அதிமுகவின் பொதுசெயலாளர் என தொடர்ந்து கூறிக்கொள்ளப்படுவதால் அவர் இந்த காணொளி சந்திப்பில் பங்குபெற மாட்டார் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :