1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (08:40 IST)

வழக்கமான ரயில்களாக மாற்றும் பணி; டிக்கெட் முன்பதிவில் மாற்றம்!

கொரோனா கால சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாற்றும் பணியால் டிக்கெட் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரொனாவால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. தற்போது அனைத்து ரயில்களும் கிட்டத்தட்ட செயல்பட தொடங்கியுள்ள நிலையில் சிறப்பு ரயில்களை வழக்கமான ரயில்களாக மாற்றுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

எனவே வழக்கமான ரயில் எண், கட்டண விதிப்பு போன்றவற்றை முன்பதிவு வதியிலும் மாற்ற வேண்டிய பணிகள் தொடங்க உள்ளது. இதனால் கடந்த 14ம் தேதி தொடங்கி வருகிற 21ம் தேதி வரை இரவு 11.30 முதல் காலை 5.30 மணி வரை இரவு நேரத்தில் மட்டும் முன்பதிவு சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.