ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 மே 2020 (20:08 IST)

மதுபோதையில் சாலையில் தகராறு செய்த இளைஞர்…தர்ம அடி கொடுத்த மக்கள்

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று தனது வீட்டின் முன் கருப்புச் சட்டை அணிந்து போராடினார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்கள் மக்கள் கூட்டமாக நின்றி அடையாள அட்டைகளைக் காட்டி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி சாலையில் மதுபோதையில் இருந்த இளைஞர் அங்கு சென்றவர்களை தாக்கினார்.  அதனால் ஆத்திரமடைந்த மக்கள் இளைஞரை பிடித்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  இளைஞரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.