ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (14:46 IST)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவு இன்று மாலை வெளியாகிறதா?

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் கடந்த  2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர்.
 
இந்த நிலையில் தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் முடிவுகள் வரவில்லை என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் வைரலானது 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இன்று மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 
Edited by siva