1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (14:46 IST)

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்! – எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் அனைவரும் இ-பாஸ் பெறும் வகையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்டு 17 முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும். இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு எண், ரேசன் கார்டு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்தால் உடனடி இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் தொழில்ரீதியான மற்றும் தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் மக்கள் இ-பாஸ் சேவையை பயன்படுத்துமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.