திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (20:51 IST)

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசு அழைப்பு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசு அழைப்பு!
ஆகஸ்ட் 2ல் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் விழாவில் கலந்துக்கொள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 
 
பாஜக அலுவலகத்திற்கே நேரடியாக சென்று, துணை சபாநாயகர் பிச்சாண்டியும், அரசு கொறடா கோவி செழியனும் அழைப்பிதழை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி கூறியுள்ளார் என தகவல்
 
முன்னதாக ஆகஸ்டு 2 ஆம் தேதி தமிழகத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வருவதை அடுத்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அன்றைய தினம் சட்டப்பேரவையில் 3 அடுக்கு பாதுகாப்பு இருக்குமென்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன 
 
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஊட்டி செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் மூன்று நாட்கள் தங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது