சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு: பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

TN assembly
சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு: பரபரப்பில் அரசியல் கட்சிகள்!
siva| Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (18:57 IST)
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சட்டப்பேரவை வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 2 ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்கள் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்கள்‌ இந்திய அரசமைப்பு, பிரிவு 174 பிரிவின்படி தமிழ்நாடு சட்டமன்றப்‌. பேரவையின்‌ கூட்டத்தை, 2021-ஆம்‌ ஆண்டு பிப்ரவரி திங்கள்‌ 2-ஆம்‌ நாள்‌, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை-600 002, வாலாஜா சாலை, ஓமந்தூரார்‌ அரசினர்‌ தோட்டம்‌, கலைவாணர்‌ அரங்கம்‌, மூன்றாவது தளத்தில்‌ உள்ள பல்வகை கூட்டரங்கத்தில்‌ கூட்டியிருக்கிறார்கள்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
இந்திய அரசமைப்பு, பிரிவு 176 பிரிவின்‌ கீழ்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்கள்‌ சென்னை-600 002, வாலாஜா சாலை, ஓமந்தூரார்‌ அரசினர்‌ தோட்டம்‌, கலைவாணர்‌ அரங்கம்‌, மூன்றாவது தளத்தில்‌ உள்ள பல்வகை கூட்டரங்கத்தில்‌, அன்றே, அதாவது, 2021-ஆம்‌ ஆண்டு பிப்ரவரி திங்கள்‌ 2-ஆம்‌ நாள்‌, செவ்வாய்க்கிழமை, காலை 11.00 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்கள்‌. அவ்வமயம்‌ தங்கள்‌ வருகையைவேண்டுகிறேன்‌.


இதில் மேலும் படிக்கவும் :