தொல்.திருமாவளவன் - ஜி.ராமகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

thiruma g.r
Ilavarasan| Last Modified வியாழன், 28 மே 2015 (17:52 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிம் மாநிலச் செயலாளர் ஜீ.ராமகிருஷ்ணனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களை காக்கும் விசயத்தில் ஒத்த கருத்துடைய தலைவர்களை சந்தித்து வருவதாக கூறினார்.

மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பங்கு இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஜீன் 9-ல்கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 3 ஆம் தேதி நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின் முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :