பிப்ரவரி 14 இரவை கருப்பு இரவாக்கிய போலீஸார்.... ஸ்டாலின் கண்டனம்!

stalin
sinoj kiyan| Last Updated: திங்கள், 17 பிப்ரவரி 2020 (14:04 IST)
பிப்ரவரி 14 இரவை கருப்பு இரவாக்கிய போலீஸார் ஸ்டாலின் கண்டவன்

சென்னையில் நேற்று இரவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களை கைது அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக , திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது கடும் தாகுதல் நடத்தி எடப்பாடி அரசின் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பதோடுக் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், #CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவி, பிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய EPS அரசின் காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.


ஜனநாயகத்தைத் தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சி இது! என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :