குரல் அவரோடது இல்ல சரி.. குழந்தை? - தங்கதமிழ்ச்செல்வன் விளாசல்

Thanga Tamil Selvan
Last Modified செவ்வாய், 23 அக்டோபர் 2018 (16:13 IST)
பெண்ணை கற்பழித்து குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் “ ஜெயக்குமாரை சசிகலா மீன்வளத்துறை அமைச்சராக நியமித்தார். ஆனால், இன்று அவர் கருவாட்டுத்துறை அமைச்சராக மாறியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் புகைப்படம் இருக்கிறது. அந்த வீடியோவில் ஜெயக்குமாரின் குரலும், அவரின் மாமியார் குரலும் இருக்கிறது. இவ்வளவு  ஆதாரம் இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது என்னுடைய குரலே இல்லை என ஜெயக்குமார் கூறுகிறார்.  ஆனால், அது என்னுடைய குழந்தை இல்லை என ஏன் கூற மறுக்கிறார்? மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :