ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (10:05 IST)

பாஜகவிலிருந்து விலகி, அதிமுகவுக்கு தாவிய தடா பெரியசாமி.. ஈபிஎஸ் முன்னிலையில் இணைப்பு..

. பாஜகவின் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி திடீரென எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேர்தல் நேரத்தில் அதிருப்தி காரணமாக ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாஜகவின் மாநில பட்டியல் அணி தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த தடா பெரியசாமி இன்று திடீரென சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
 
ஏற்கனவே இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தவர் என்றும் அதன் பின்னர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அதிமுகவுக்கு தாவி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வேட்பமனு தாக்கலுக்கான நாள் முடிவடைந்துவிட்டதை அடுத்து இவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றாலும் அதிமுகவுக்கு தீவிர பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பாஜகவை தற்போது அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில் இந்த இரு கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் பாஜகவில் இருந்து இந்த இரு கட்சிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் மாறி மாறி அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran