ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (13:40 IST)

3,552 சீருடை பணியாளர் பணியிடங்கள்! – தேர்வு அறிவிப்பு!

TNUSRB
தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சீருடை பணியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3,552 சீருடை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்காக இளைஞர்கள் பலர் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.