திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (20:43 IST)

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிடமாற்றம்

st  George port-tamilnadu
தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்துறை ஆணையரராக இருந்த எஸ். சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீய் முரளிதரன் சமூக  நலத்துறை செயலாளராக  பணிடம் மாற்றப்பட்டுள்ளார்.

நில  நிர்வாகத்துறை  ஆணையகராக இருந்த எஸ். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக பணியிடம்  மாற்றப்பட்டுள்ளார்.

மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிடம்  மாற்றப்பட்டுள்ளார்.

சமூக  நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு மீன்வளத்துறை ஆணையராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.