1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (11:45 IST)

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சரை காப்பாற்ற நினைக்கும் தமிழக அரசு? ஸ்டாலின் கண்டனம்

குட்கா ஊழல் வழக்கை நேர்மையாக விசாரித்து வந்த ஜெயக்கொடி ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு வேறு துறைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
                  விஜயபாஸ்கர்                                      ராஜேந்திரன்                                       ஜார்ஜ்

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த ஜெயக்கொடி குட்கா ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தார். குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேர்மையான விசாரணை என நீதிபதியால் பாராட்டப்பட்டவர். இந்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக மோகன் பியார் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 
                             ஜெயக்கொடி                                                                         மோகன் பியார்


இந்நிலையில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையைத் திசை திருப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.