சவூதியில் இறந்துபோன கணவரின் சடலத்தை மீட்டுத்தரக்கோரி மணைவி மனு: பணியாற்றிய முகவரி தெரியவில்லை

Ashok| Last Updated: திங்கள், 4 ஜனவரி 2016 (20:07 IST)
சவூதி அரேபியாவில் பணியாற்றிய நிறுவனத்தின் முகவரி தெரியாத நிலையில், டிரைவர் பணிக்கு சென்று மாரடைப்பால் இறந்துபோன தனது கணவரின் சடலத்தை மீட்டுத்தரக்கோரி அவரது மனைவி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.
 
 
இதுகுறித்து அவர் அளித்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா லெம்பலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னதாக எனக்கு திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், குடும்பச்சூழல் காரணமாக சரவணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்  ஓட்டுனர் பணிக்காக சவூதி அரேபியாவிலுள்ள பெகரான் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.
 
கடந்த மாதம் 26 -ஆம் தேதி பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால்  இறந்து விட்டதாக அவருடன் பணியாற்றிய நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அவரது சடலம் அங்குள்ள மருத்துவமனையில்  உள்ளதாகவும் தெரியவருகிறது.
 
இந்நிலையில், இறந்துபோன தனது கணவர் சரவணின் சடலத்தை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் மத்திய அரசை அணுகி  துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், வேலைக்கு எடுத்த நிறுவனத்தின் பெயரும், சரியான முகவரியும் தெரியாமல் போனதால் தான் எனது அண்ணனின் உடலை தமிழ் நாட்டிற்கு கொண்டுவர முடியவில்லை என்று அவரது தம்பி தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய அண்ணன் இறந்து 10 நாட்களைக் கடந்தபிறகும்  தமிழகத்திற்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு மத்திய அரசு மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :