ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (20:44 IST)

ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

stalin
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் அவர் ஆற்றிய உரை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள பசுமை காலநிலை நிறுவனத்தை உருவாக்கி உள்ளோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
மேலும் உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களை காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் இந்தியா டி20 தலைமை ஏற்றுள்ள நிலையில் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாளும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva