ஸ்டாலினை மௌனமாக்கியக் கேள்வி – விடாத கிராமத்துப் பெண்

Last Modified சனி, 12 ஜனவரி 2019 (13:17 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக சார்பில் தமிழகம் எங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்திப் பங்கேற்று வருகிறார்.

சென்ற சட்டசபைத் தேர்தலின் போது நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் மூலம் மக்களை சந்தித்த ஸ்டாலின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிராமசபைக் கூட்டங்களைக் கையில் எடுத்துள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை கிராமசபைக் கூட்டம் நடத்த சொல்லி அறிவுறுத்தியது மட்டுமல்லாமல் தானும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம்  ஈழலூர் கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது  அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ‘ திமுக ஆட்சிக்கு வந்தால், முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?. ஊர் முழுவதும் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அது உங்களால் முடியுமா ‘ எனக் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு நீண்ட நேரம் மௌனமாக இருந்த ஸ்டாலின் அந்தப் பெண்ணின் விடாப்பிடியால்  மௌனம் கலைத்த ஸ்டாலின் யோசனைக்குப் பின் ‘ உங்களுக்கு நம்பிக்கை இருக்கா ?’ எனக் கேட்டார். அந்தப் பெண் உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்றவுடன் ‘கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் மது விலக்கு அமல்படுத்தப்படும்’ என அறிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :