திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:02 IST)

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் பிரேத பரிசோதனை! – உறவினர்கள் அதிர்ச்சி!

இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர்களின் உடலை இலங்கையில் பிரேத பரிசோதனை செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீவிர தேடுதலுக்கு பிறகு நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையில் கப்பல் மீனவர்களின் படகை மோதியதால் மீனவர்கள் உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்களின் உடல்கள் நாளை இந்திய கடற்படையிடம் நாளை காலை ஒப்படைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படாது என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இலங்கை அரசு மீனவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.