விஜயகாந்த் கல்லூரியில் எனது மகன் அடித்து கொலை: பெற்றோர் புகார்

விஜயகாந்த் கல்லூரியில் எனது மகன் அடித்து கொலை: பெற்றோர் புகார்


Abimukatheesh| Last Updated: சனி, 13 ஆகஸ்ட் 2016 (09:52 IST)
விஜயகாந்த் கல்லூரியில் படித்து வந்த தனது மகன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள், முதல் அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

 

 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலூகாவைச் சேர்ந்த சீராளன்-நாகம்மாள் ஆகியோரின் மகன் சிவசுப்பிரமணி விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
 
ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தப்போது சிவசுப்பிரமணி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது, அவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.
 
இதுதொடர்பாக அவனது பொற்றோர் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இது அவர்களுக்கு பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அவனது பெற்றோர் நடந்த சம்பவத்தை தெளிவாக விளக்கி முதல் அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதில் விஜயகாந்த், பிரமலதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்பிட்டுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :